கம்பராமாயணம் 6116 · யுத்த 2.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திருநகர் முழுவதும் - அழகிய இலங்கை மாநகர் முழுவதையும், திருந்த நோக்கிய பொருகழல் இராவணன் - திருத்தமுற நன்கு நோக்கிய வீரக்கழலணிந்த கால்களை உடைய இராவணன்; அயற்கு பூசனை வரன்முறை இயற்றி - பிரமனுக்குச் செய்யவேண்டிய வழிபாடுகளை முறைப்படி செய்து; அரியன தச்சற்கும் ஆணையான் உதவி - தெய்வத் தச்சனாகிய மயனுக்கும் அரிய பல பொருள்களைத் தனது ஆணையால் தந்து; நீ வழிக்கொள்வாய் என்றான் - நீ உன்னிருப்பிடத்துக்குச் செல்வாயாக என்று கூறி வழியனுப்பினான்.
பொருகழல் - பொருந்திய கழல். தச்சன் - மயன். வழிக்கொள்ளுதல் -செல்லுதல். திருந்த நோக்குதல் - நன்றாகப் பார்த்தல் வரன்முறை - முறைப்படி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having looked well over the whole fair city,
- Irāvaṇaṉ of the battle-anklets paid worship to Ayaṉ
- in due order and said, You may go your way;
- and by his command he gave rare gifts to the architect as well.
What the poem says
Satisfied with the rebuilt city, Irāvaṇaṉ honours Piramaṉ with the proper rites and bids him farewell, and by royal order has rare gifts given to Mayaṉ, the divine architect who did the work.