கம்பராமாயணம் 6117 · யுத்த 2.5

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ்வழி ஆயிரம் ஆயிரம் அவிர்
செவ்வழிச் செம்மணித் தூண்கள் சேர்த்திய
எவ்வம் இல் மண்டபத்து அரிகள் எந்திய
வெவ்வழி ஆசனத்து இனிது மேவினான்.

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அதன் பின்னர்; ஆயிரம் ஆயிரம் - ஆயிரம் ஆயிரமாக (பல்லாயிரக்கணக்காக); அவிர் செவ்வழிச் செம்மணி - ஒளி விளங்குகின்ற செம்மையான மாணிக்கத்தால் ஆகிய; தூணம் சேர்த்திய - தூண்கள் அமைந்த; அவ்வெழில் மண்டபத்து - அவ்வழகிய மண்டபத்திலே; அரிகள் ஏந்திய - சிங்கங்கள் சுமந்த; வெவ்வழி ஆசனத்து - விரும்பத்தகும் தன்மையுடைய அரியணையிலே; இனிது மேவினான் - (இராவணன்) இனிது வீற்றிருப்பானானான்.

வெம்மை - வேண்டுதல், விரும்புதல். அவிர்தல் - ஒளி வீசுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then, in that beautiful hall set with thousands upon thousands
  2. of shining, finely made pillars of red rubies,
  3. upon the desirable throne borne up by lions,
  4. he seated himself at ease.

What the poem says

After the rebuilding, Irāvaṇaṉ goes to his council hall and takes his seat on a lion throne. The hall's pillars are made of countless glowing rubies, and the scene is set for the council that gives the canto its name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaḻi āyiram āyiram avir
cev vaḻic cem maṇit tūṇam cērttiya
av eḻil maṇṭapattu arikaḷ ēntiya
vev vaḻi ācaṉattu iṉitu mēviṉāṉ.