கம்பராமாயணம் 6118 · யுத்த 2.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரம்பையர் - அரம்பையர் முதலிய தேவ மாதர்கள் வீசும்; கவரியோடு ஆடும் தாரினான் - கவரியோடு ஆடும் மாலையை அணிந்தவனாகிய இராவணன்; வரம்பு அறு சுற்றமும் - எல்லையில்லாத சுற்றத்தவர்களும்; மந்திரத் தொழில் நிரம்பிய முதியரும் - மந்திராலோசனையில் வல்ல வயது முதிர்ந்த அமைச்சர்களும்; சேனை நீள் கடல் தரம் பெறு தலைவரும் - சேனையாகிய பெரிய கடல் நடத்தும் தகுதி மிக்க தானைத்தலைவர்களும்; தழுவத் தோன்றினான் - தன்னைச் சூழ்ந்திருக்க, விளங்கினான்.
மந்திரம்-ஆலோசனை. தரம்-தகுதி (மேன்மையும் ஆம்) அரம்பையர் கவரி வீசுதல் இராவணனுக்குச் செய்யும் உபசாரமாம். கவரி அசைய இராவணன் மார்பிலணிந்திருந்த மாலையும் அசைந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his boundless kin, with the elders perfect
- in the work of counsel, and with the commanders fit to lead the long sea of the army
- gathered round him, he shone forth,
- he whose garland sways with the fly-whisks waved by the celestial dancers.
What the poem says
Irāvaṇaṉ sits surrounded by his relatives, his experienced ministers and his generals, while heavenly nymphs such as Rambhā fan him with yak-tail whisks, so that his garland sways in the breeze.