கம்பராமாயணம் 6119 · யுத்த 2.7

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முனைவரும் தேவரும் - (அரக்கர் அல்லாது) முனிவர்களும், தேவர்களும், மற்றும் உள்ளோர் எனைவரும் - மற்றும் உள்ள அரக்கர்களின் வேறான மற்றவர்களும், தவிர்க என - ஆலோசனை மண்டபத்தை விட்டு நீங்குக என்று; ஏய ஆணையான் - கட்டளை இட்டவனாய், புனைகுழல் மகளிரோடு - அலங்கரிக்கப்பட்ட கூந்தலை உடைய பெண்களோடு; இளைஞர் போக்கினான் - அறிவு முதிர்ச்சி பெறாத இளைஞர்களையும் மண்டபத்திலிருந்து போகச் செய்தவனாய்; நினைவுறு காரியம் - இராவணன் தான் நினைத்த காரியத்தை, நிகழ்த்தும் நெஞ்சினான் - நிகழ்த்தும் மனம் உடையவனான இராவணன்;

முனைவர்-முனிவர்கள். முனிவரும், தேவரும் பகைப்புலத்தராதலின் அவர்களை வெளியேற்றினான். பற்றற்றவர்களாதலின் நீக்கினான் எனினுமாம். பெண்கள் இரகசியத்தைப் பாதுகாக்க மாட்டார்கள் என்பதாலும், இளைஞர் அறிவு முதிர்ச்சி பெறாதவர்கள் என்பதாலும் அவர்களையும் வெளியேறச் செய்தான். பிறகு தான் நினைத்த காரியத்தை நிறைவேற்ற எண்ணியதால் மந்திராலோசனை நிகழுமிடத்தில் சிலரை நீக்கினான். மற்று உள்ளோர் - கின்னரர் கந்திருவர் கிம்புருடர் வித்தியாதரர் என்பவராவார். மகளிரும் இளைஞரும் மந்திராலோசனை மண்டபத்தில் இருக்கப் பெறாதாராவர் இதனை,

"துன்று பிணியோர் துறந்தோர், அடங்காதோர், கன்றுசின மனத்தோர் கல்லாதவர், இளையோர் ஒன்றும் முறைமை உணராதவர், மகளிர் என்றுமிவர் மந்தணத்தின் எய்தப் பெறாதாரே"

என்ற பாரதப்பாடலாலும் அறியலாம். (உத. கிரு. தூ: 52)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sages and gods and all others who are here,
  2. let every one of them leave, so he commanded,
  3. and sent away the young along with the women of adorned tresses,
  4. he whose heart was set on carrying out what he had in mind.

What the poem says

Preparing for a secret council, Irāvaṇaṉ clears the hall of sages, gods and other non-demon beings, who are the enemy's side, and of women and young men, considered unfit to keep counsel. The commentary cites a verse from the Tamil Mahābhārata listing those who should be excluded from secret deliberations, including women and the young.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṉaivarum tēvarum maṟṟum uṟṟuḷōr
eṉaivarum tavirka' eṉa ēya āṇaiyāṉ
puṉai kuḻal makaḷirōṭu iḷaiñarp pōkkiṉāṉ;
niṉaivuṟu kāriyam nikaḻttum neñciṉāṉ.