கம்பராமாயணம் 6120 · யுத்த 2.8

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்
தண்டலில் மந்திரத் தலைவர் சார்க எனக்
கொண்டு உடன் இருந்தனன்; கொற்ற ஆணையான்
வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.

பொருள் · Meaning in Tamil

கொற்ற ஆணையான் - வெற்றிமிக்க ஆணைச் சக்கரத்தை உடைய இராவணன்; வண்டொடு காலையும் - வண்டுகளையும் காற்றையும் கூட, வரவு மாற்றினான் - ஆலோசனை மண்டபத்துக்குள் வாராதபடி தடை விதித்தான்; (அதன் பின்) பண்டிதர்- கல்வி மேம்பாடுடைய அறிஞர்களும்; பழையவர்- நீண்ட நாள்கள் பழகிய பழமையோரும்; கிழவர்- நெருங்கிய உறவுடைய சுற்றத்தினரும்; பண்பினர் - நல்ல பண்புடைய நட்புடையவர்களும்; தண்டல் இல் மந்திரத் தலைவரும் - தன்னைப் பிரிந்து என்றும் நீங்குதல் இல்லாத நல்ல ஆலோசனைகளைக் கூற வல்ல அமைச்சர்களும், சார்க என - மந்திராலோசனை மண்டபத்துக்கு வருக என்றுகூறி; கொண்டு உடன் இருந்தனன் - அவர்களை உடன் கொண்டு அமர்ந்தான்.

கிழவர் - நெருங்கிய உறவினர். கொற்ற ஆணை - வெற்றி தரும் கட்டளையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Let the learned, the old companions, the close kin, the men of good character,
  2. and the unfailing chiefs of counsel come near, he said,
  3. and sat with them; and by his victorious command
  4. he stopped even the bees and the wind from coming in.

What the poem says

Irāvaṇaṉ calls in only scholars, longtime companions, close relatives, trusted friends and his faithful ministers, and orders that not even a bee or a breath of wind may enter the hall, so complete is the secrecy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṇṭitar paḻaiyavar kiḻavar paṇpiṉar
taṇṭal il mantirat talaivar cārka eṉak
koṇṭu uṭaṉ iruntaṉaṉ; koṟṟa āṇaiyāl
vaṇṭoṭu kālaiyum varavu māṟṟiṉāṉ.