கம்பராமாயணம் 6122 · யுத்த 2.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகு சேரினும் - எல்லா உலகங்களிலும் உள்ளவர் எல்லோரும் எதிர்த்து வந்தாலும்; பிசை தொழில் மறவரை- பிசைந்து ஒழிக்க வல்ல வீரர்களை; திசை தொறும் நிறுவினன் - எல்லாத் திசைகளிலும் நிறுத்தி வைத்தான்; விசை உறு பறவையும் - (அதனால்) விரைந்து செல்லும் பறவைகளும்; விலங்கும் - மிருகங்களும்; வேற்றவும் - மற்றவையும், சித்திரத்தினே - சித்திரத்தில் உள்ளவை போல; அசை தொழில் அஞ்சின - சிறிதே அசைவதற்கும் அஞ்சினவாயின; பிறிது என் பேசுவ - (என்றால்) வீரர்களின் காவல் திறத்தை வேறு என்ன பேசுவதற்கிருக்கிறது.
"வேற்றவும்” என்பது பறவையும், விலங்கும் அல்லாத மானிடர் முதலியவர்களை. பேசுவ - பேசுவது என்னும் பொருளுடையது. சித்திரத்தினே - சித்திரத்தைப் போல 'இன்' உவமைப் பொருள் தந்து நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In every direction he stationed warriors skilled in crushing,
- even if the whole world should come; what more is there to say?
- The swift birds, the beasts and all the others
- feared even to stir, as if they were in a painting.
What the poem says
Irāvaṇaṉ posts warriors in every direction, strong enough to crush the whole world if it attacked. So fearsome is the guard that birds, beasts and every other creature dare not move, as still as figures in a picture.