கம்பராமாயணம் 6123 · யுத்த 2.11

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது என்? இனி
மாட்சி ஓர் குரங்கினால் அழிதல் மாலைத்தே?
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று'எனாச்
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்.

பொருள் · Meaning in Tamil

மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர் - (இராவணன்) எனது பெருமை ஒரு குரங்கினால் சிறந்த இலங்கை நகர் அழிந்தது என்றால், இதனின் மேல் - இதை விடவும்; இங்கு தாழ்ச்சி தருவது இனி என் - இங்கு எனக்கு தாழ்வைத்தருவது வேறு என்ன இருக்கிறது? ஆட்சியும் அமையவும் என் அரசும் நன்று - எனது ஆட்சி பலமும் அமைந்துள்ள தகுதியும் எனது அரச பதவியும் நன்றாயிருக்கிறது! எனா, சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான் - என்று தனது அமைச்சர்களை நோக்கிக் கூறுவானாயினான்.

ஆட்சி- ஆட்சி புரியும் திறம். அமைவு- பொருந்திய சிறப்பு அரசு - அரச பதவியை உணர்த்தும். சூழ்ச்சியின் கிழவர் - ஆலோசனையில் வல்ல அமைச்சர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What could bring greater shame upon me here than this,
  2. the great city of glory destroyed by a single monkey?
  3. My rule, my fitness and my kingship are fine indeed! So saying,
  4. he looked at the elders of counsel and began to speak.

What the poem says

Irāvaṇaṉ opens the council with bitter sarcasm: his splendid city has been wrecked by one monkey, and nothing could humiliate him more. A fine king he is, he says, and turns to his ministers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāḻcci iṅku itaṉiṉmēl taruvatu eṉ? iṉi
māṭci ōr kuraṅkiṉāl aḻinta mānakar?
āṭciyum amaiyavum eṉ aracum naṉṟu' eṉā
cūḻcciyiṉ kiḻavarai nōkkic colluvāṉ.