கம்பராமாயணம் 6124 · யுத்த 2.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குரங்கு சுட்டது - ஒரு குரங்கு சுட்டது; எரி சூறை ஆடிட - நெருப்பு சூறையாட (கொள்ளை கொள்ளு; கொடி நகர் கெட்டது - கொடிகள் கட்டப்பட்டுள்ள இலங்கை மாநகரமே அழிந்தது; கிளையும் நண்பரும் பட்டனர்- உறவினர்களும், நண்பர்களும் இறந்தனர்; பரிபவம் எங்கணும் பரந்தது - அவமானம் எங்கும் பரவியது; இட்டது இவ்வரியணை - இங்கு இடப்பட்ட இந்தச் சிங்காதனத்திலே; என் உடல் இருந்தது - (நேர்ந்த தீமையைத் தடுக்க இயலாத) எனது உடல் (பலனின்றி) இருந்தது.
எரி - நெருப்பு. சூறையாடல் - கொள்ளை இடுதல். பரிபவம் - அவமானம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A monkey burned it; with the fire plundering,
- the bannered city was ruined; kin and friends
- have died; disgrace has spread everywhere;
- and on this throne set here my body sat.
What the poem says
Irāvaṇaṉ lists his humiliations: a monkey set Ilaṅkai ablaze, the city was ruined, relatives and friends perished, and dishonour spread across the world, while he himself sat uselessly on his throne.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṭṭatu kuraṅku; eri cūṟaiyāṭiṭak
keṭṭatu koṭi nakar; kiḷaiyum naṇparum
paṭṭaṉar; paripavam parantatu eṅkaṇum;
iṭṭatu iv ariyaṇai iruntatu eṉ uṭal.