கம்பராமாயணம் 6125 · யுத்த 2.13

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கிணறு உதிரம் ஊறுகின்றன - இலங்கை மாநகரில் உள்ள கிணறுகளில் நீருக்குப் பதிலாக இரத்தம் ஊறுகின்றன; ஒள் நகர் அழல் ஆறுகின்றில- (இலங்கையில் அனுமன் வைத்த தீ இன்னும் ஆறவில்லை; அகிலும் நாவியும் கூறும் - அகிலும், கத்தூரியும் கமழ்வது என்று கூறுகின்ற; மங்கையர் நறுங்கூந்தலின் - இலங்கை வாழ் பெண்களின் மணம் மிக்க கூந்தல் யாவும்; சுறு நாறுகின்றது - சுறு நாற்றம் நாறுகின்றது; நாம் எலாம் நுகர்ந்து இருந்தம் - அதனை நாம் எல்லோரும் அனுபவித்து இருந்தோம்.

சுறு நாற்றம்-கூந்தலில் நெருப்புப் பிடிப்பதால் எழும் துர்நாற்றம். இருந்தம் - இருந்தோம். தன்மைப்பன்மை வினைமுற்று. ஒள் நகர் ஒளி பொருந்திய நகரம் (இலங்கை) அகில் -அகிற்புகை. நாவி- கஸ்தூரிக் கலவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The wells are welling up with blood; in the bright city
  2. the flames have not died down; the fragrant tresses of the women,
  3. once said to breathe of aloe and musk,
  4. reek of scorched hair; we have all sat and smelt it.

What the poem says

Irāvaṇaṉ describes the aftermath of the fire: blood rises in the wells instead of water, the city still smoulders, and the women's hair, once perfumed with aloe smoke and musk, smells of burning. And they have all simply sat and endured it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṟukiṉṟaṉa kiṇaṟu utiram; oṇ nakar
āṟukiṉṟila taḻal; akilum nāviyum
kūṟum maṅkaiyar naṟuṅ kūntaliṉ cuṟu
nāṟukiṉṟatu; nukarntiruntam nām elām.