கம்பராமாயணம் 6126 · யுத்த 2.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மற்று இலது ஆயினும் - வேறு எதுவும் நாம் செய்யவில்லை எனினும், மலைந்த வானரம் - இங்கு வந்து போர் செய்த ஒரு குரங்கு (அனுமன்) இற்று இலதாகியது - செத்து ஒழிந்து போயிற்று; என்னும் வார்த்தையும் பெற்றிலம் - எனப் பிறர் கூறும் பேச்சைக் கூடக் கேட்கப் பெற்றிலோம்; பிறந்திலம் என்னும் பேர் அலால்- பிறந்தும் பிறவாதவரானோம் என்ற பெயரைத்தவிர பழியின் மூழ்கினோம் - பழியாகிய கடலிலே மூழ்கி விட்ட நாம்; இனி முற்றுவது என் - இனி என்ன செய்து முடிக்கப் போகிறோம்.
ஒரு குரங்கை ஏவி, நமக்குத் தீமை விளைவித்த பகைவர் வாழும் இடம் சென்று வென்று வரவில்லை என்றாலும் என்பான், 'மற்றிலதாயினும்' என்றான். முற்றுதல்- செய்து முடித்தல். மலைதல்- போர் செய்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if nothing else is done, the word that the monkey who fought us
- has been destroyed and is no more,
- even that we have not had; but for the name that we are as good as unborn,
- what is left for us to achieve, now that we have sunk in disgrace?
What the poem says
Irāvaṇaṉ laments that, quite apart from failing to strike at the enemies who sent the monkey, his people have not even managed to kill Aṉumaṉ himself. They have earned only the name of being as good as never born and are drowning in shame.