கம்பராமாயணம் 6127 · யுத்த 2.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று அவன் இயம்பலும் - என்று இராவணன் கூறவும்; கன்றிய - இராவணனுடைய பேச்சினால் வருந்திய; சேனை காவலன் - படைத்தலைவனான பிரகத்தன்; புணர்ப்பின் நெஞ்சினான் - சூழ்ச்சி மனமுடையவனுமாகிய அவன்; எழுந்து இறைஞ்சினான் - எழுந்து இராவணனை வணங்கி; ஒன்று உளது உணர்த்துவது - உனக்குத் தெரிவிப்பது ஒன்று உண்டு; ஒருங்கு கேள் எனா - அதை முழுவதும் கேட்பாயாக என்று கூறி; நின்றனன் நிகழ்த்தினன் - நின்று கூறுவானானான்.
படைத்தலைவன் ஆதலால் முதலில் பேசினான். பிரகத்தன் என்பது அவன் பெயர். கருங்கழல் - வலிய வீரக்கழல். புணர்ப்பு- சூழ்ச்சி. கன்றுதல் -மனம் வருந்துதல். ஒருங்கு-முழுவதும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had spoken thus, rose and bowed
- the commander of the army, of strong dark anklets, stung at heart;
- saying, There is something to make known; hear it fully,
- he stood and spoke, he whose heart was full of schemes.
What the poem says
The first to answer is Irāvaṇaṉ's commander-in-chief, named Pirakattaṉ in the commentary, a shrewd man pained by his king's words. He rises, bows and asks Irāvaṇaṉ to hear him out.