கம்பராமாயணம் 6128 · யுத்த 2.16

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல்
பஞ்சின் நல் மெல் அடி மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது
தஞ்சு என உணர்ந்திலை; உணரும் தன்மையோய்.

பொருள் · Meaning in Tamil

உணரும் தன்மையோய் - நன்மை தீமைகளை உணரும் தன்மை உடையவனே! மனிதரை வஞ்சனை இயற்றி - மானிடர்களான இராம, இலக்குவர்களை வஞ்சித்து; வாள்நுதல் - ஒளி பொருந்திய நெற்றியையும், பஞ்சு அன மெல்லடி மயிலை - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மெல்லிய பாதங்களையும் உடைய மயில் போன்ற சீதாபிராட்டியை; பற்றுதல் - கவர்ந்து வருதல்; அஞ்சினர் தொழில் என - அம்மனிதர்களுக்குப் பயந்தவர்கள் செய்யும் காரியம் என்று; அறிவித்தேன் - முன்பே தெரிவித்தேன்; அது தஞ்சு என உணர்ந்திலை - அது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று நீ உணரவில்லை.

உணரும் தன்மை- நல்லதும், கெட்டதும் தெரிந்து கொள்ளும் தன்மை என்பதைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To seize by deceiving the men the peahen
  2. with bright brow and soft feet like cotton
  3. is the deed of those who fear, so I told you; that
  4. you did not take as sound, you who have the power of understanding.

What the poem says

The commander reminds Irāvaṇaṉ that he warned him from the start: carrying off Cītai by tricking Irāmaṉ and Ilakkuvaṉ was a coward's act, but Irāvaṇaṉ, for all his discernment, would not listen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vañcaṉai maṉitarai iyaṟṟi vāḷ nutal
pañcu aṉa mel aṭi mayilaip paṟṟutal
añciṉar toḻil eṉa aṟivittēṉ atu
tañcu eṉa uṇarntilai; uṇarum taṉmaiyōy.