கம்பராமாயணம் 6129 · யுத்த 2.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரன் முதல் வீரரை - கரன், தூடணன், திரிசிரா முதலிய வீரர்களை; கொன்ற கள்வரை - கொன்றழித்த கள்வர்களும்; விரிகுழல் உங்கை - விரிந்த கூந்தலை உடைய நின் தங்கையான சூர்ப்பனகையினது; மூக்கு அரிந்த வீரரை - மூக்கை அறுத்து பங்கப்படுத்திய வீரர்களும் ஆகிய; பரிபவம் செய்ஞ்ஞரை - உன்னை அவமானப்படுத்திய அந்த மானிடர்களை; படுக்கலாத நீ - (கொன்று ஒழித்திருக்க வேண்டும்) இதுவரையும் கொன்றழிக்காத நீ; அரசியல் அழிந்ததென்று - அரசியல் அழிந்து போனதென்று; அயர்தி போலும் - சோர்வடைகிறாய் போலும்.
முதல் மூன்று வரிகளில் இராமன் இலக்குவர் செய்த தீமை பெரிதென்பதைக் கூறி, அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே என விளக்கினான். தவ வேடத்துக்குச் சிறிதும் பொருந்தாத செயல் செய்தவரென்பதால் 'கள்வர்' என்றான். 'விரிகுழல் உங்கை' என்பதால் சூர்ப்பனகை ஏற்கனவே கணவனை இழந்தவள் என்பது குறித்தது. அவர்கள் இருக்குமிடம் சென்று அழிக்காமல் அரசியல் அழிந்தது என்று கூறிச் சோர்வடைதல் தகுமோ என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The thieves who killed Karaṉ and the other heroes,
- the warriors who cut off the nose of your sister of loose tresses,
- the men who brought you disgrace, you, who have not laid them low,
- seem to be grieving that your kingship has been ruined.
What the poem says
The commander rebukes Irāvaṇaṉ: the princes killed Karaṉ, Tūṭaṇaṉ and Tiricirā and mutilated his sister Cūrppaṇakai, yet he has never gone to destroy them, and now he complains that his rule has collapsed. He calls them thieves because they behaved unlike the ascetics they appear to be, and Cūrppaṇakai's loose hair marks her as a widow.