கம்பராமாயணம் 613 · பால 10.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்ன மென் - அன்னம் போன்ற மெல்லிய; நடையவட்கு - நடையை உடைய சீதைக்கு; அமைந்த - (உடம்பு முழுதும்) பொருந்தின; காமத்தீ - காமமாகிய நெருப்பு; தன்னையும் சுடுவது - (மேலே எழுந்து இயல்பாக வெப்பம் கொண்ட) தன்னையும் எரிப்பதை; தரிக்கிலான் என - பொறுக்கமாட்டாதவன்போல், முன்னை வெம் கதிரவன் - பழைமையான வெப்பக் கதிர்களையுடைய சூரியன்; நல் நெடு கரங்களை - தன்னுடைய நீண்ட கைகளை; நடுக்கி - நடுங்கச் செய்து; ஓடிப்போய் - விரைந்து சென்று; கடலில் மூழ்கினான் - (மேற்குக்) கடலிலே மூழ்கினான்.
சீதையின் காமத்தீ இயற்கை வெப்பமுள்ள கதிரவனையும் சுடும் வல்லமை பெற்றதாயிற்று. வெப்பம் முதலானவற்றால் துன்பப்படுகின்றவர்க்கு கைகள் நடுங்குதல் இயல்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if he could not bear that the fire of longing that had settled in her of the soft swan's gait
- should scorch even him,
- shaking his good long hands, running away,
- the ancient hot-rayed sun sank into the sea.
What the poem says
Evening falls in Mitilai on the day Cītai has glimpsed Irāmaṉ from her balcony. The poet gives the sunset a fanciful cause: the fever of love burning in Cītai is so fierce that even the sun, hot by nature, cannot bear it, and he flees and plunges into the western sea to cool himself.
The sun's "hands" are his rays. A person tormented by heat shakes his hands, so the trembling rays of the setting sun become the gestures of someone scalded and running for water.