கம்பராமாயணம் 614 · பால 10.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரிமலர்த் தென்றலாம் - மலர்ந்த பூக்களின் படிந்து வரும் தென்றலாகிய; வீசு பாசமும் - வீசிப் பிணிக்கும் பாசாயுதமும்; எரிநிறச் செக்கரும் - தீயைப் போன்ற நிறமுடைய செவ்வானமாகிய செம்பட்டை மயிரும்; இருளும் - இருளாகிய கரிய நிறத்தையும்; காட்டலால் - தன்னிடத்தே தோன்றக் காண்பித்தலாலே; அரியவட்கு - அருமையானவளாகிய சீதைக்கு, அனல் தரும் - காமத் தீயை வளர்க்கின்ற, அந்தி மாலை ஆம் - அந்திக் காலம் என்கின்ற; கருநிறம் - கரிய நிறமும்; செம் மயிர் - சிவந்த மயிர்களையும் உடைய; காலன் தோன்றினான் - இயமன் வந்தான்.
சீதை காமவேதனையால் வருந்தும்பொழுது அதை மேலும் வளர்க்கும் அந்திப்பொழுது வந்தது; அது அவளுக்கு இயமன் வந்து தோன்றியதுபோல இருந்தது என்றார். செக்கர்: செவ்வானம் - பண்பாகுபெயர். அரியவள்: பிற பெண்களிடம் காணப்பெறாத அருமையான பண்புகளையுடையவள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because it showed the flung noose that is the breeze from the opened flowers,
- the fire-coloured red of the sky, and the darkness,
- to that rare woman the evening twilight that brings her fever
- appeared as Kālaṉ himself, dark-bodied and red-haired.
What the poem says
The evening that feeds Cītai's longing is pictured as Yama, the god of death, coming for her. Every feature of dusk matches his traditional figure: the southern breeze laden with flower scent is the noose he throws to bind a life, the red glow of sunset is his tawny hair, and the gathering dark is his black body.
The verse is a sustained metaphor. Cītai is called "the rare one", a woman whose qualities are not found in others.