கம்பராமாயணம் 615 · பால 10.63

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மீது அறை பறவை ஆம் பறையும், கீழ் விளி
ஓதம் என் சிலம்பொடும், உதிரச் செக்கரும்
பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால்,
சாதகர் என்னவும் தகைத்து அம் மாலை ஏ.

பொருள் · Meaning in Tamil

மீது அறை - மேலே (வானத்திலே) ஒலிக்கின்ற; பறவையாம் - பறவைகளாகிய, பறையும் - பறை என்னும் வாத்தியத்தையும்; கீழ்விளி - கீழே (நிலத்திலே) ஒலிக்கின்ற; ஓதம் என் - கடலாகிய; சிலம்பொடும் - காற்சிலம்பையும், செக்கர் - செவ்வானமாகிய; உதிரமும் - இரத்தக் குறிகளையும்; பாதக இருள்செய் - (சீதைபோலக் காமவேதனை கொண்டவர்க்குத்) துன்பத்தை விளைக்கும் இருளாகிய; கஞ்சுகமும் - கருஞ்சட்டையையும்; பற்றலால் - கொண்டிருப்பதனால்; அம் மாலை - அந்த மாலைப் பொழுது; சாதகர் என்னவும் - சாதகர் என்ற பெயரிய ஒருவகைக் கடுமையான விரதத்தராம் தேவி உபாசகர் என்று சொல்வதற்கும்; தகைத்து - தகுதியுடையது.

பறை: தமருகம் முதலிய வாத்தியம். சாதகர்: கடுநோன்பும் சூளுறவும் கொண்ட தேவி உபாசகர். மாலைக் காலமானது பறவையொலியையே பறை ஒலியாகவும், கடல் ஒலியையே காற்சிலம்பொலியாகவும் கொண்டு இருளாகிய கருஞ்சட்டையைத் தரித்துச் செக்கராகிய உதிரத்தை ஏந்தி உபாசகர் போன்று இருந்தது. அணி: தற்குறிப்பேற்றவணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the drum that is the birds beating above, and below, the calling
  2. sea for its soft anklet, the blood that is the red sky,
  3. and the cruel darkness worn as a cloak,
  4. that evening was fit to be called one of the Cātakar.

What the poem says

Dusk is compared to a Cātakar, a votary of the fierce goddess who keeps harsh vows. Such worshippers beat drums, wear jingling anklets, dress in black and carry blood offerings. Evening has all of these: the cries of birds homing overhead are its drumbeat, the murmur of the sea below is its anklet, the red of sunset is the blood, and the darkness that torments lovers is its black garment.

The figure is a poetic fancy in which the poet attributes an imagined cause or identity to a natural scene.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mītu aṟai paṟavai ām paṟaiyum, kīḻ viḷi
ōta meṉ cilampoṭum, utirac cekkarum
pātaka iruḷ cey kañcukamum paṟṟalāl,
cātakar eṉṉavum takaittu am mālaiyē.