கம்பராமாயணம் 616 · பால 10.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கயங்கள் என்னும் - பொய்கைகள் என்ற; கனல் தோய்ந்து - நெருப்பிலே படிந்து (உடம்பு காய்ந்து); கடி நாள் மலரின் - மணமுள்ள புதிய பூக்களிலிருந்து; விடம் பூசி - (மகரந்த மாகிய) நஞ்சை எடுத்து மேலே பூசிக்கொண்டு; இயங்குதென்றல் - உலாவும் தென்றல் காற்று (ஆகிய கூர்வேல்); மன்மதவேள் எய்த - மன்மதன் (தன் அம்புகளை) எய்ததால் உண்டான; புண்ணின் இடை நுழைய - புண்களின் துளைகளிலே மேலும் (தைத்து) உள் செல்ல; உயங்கும் உணர்வும் - (அதனால்) குலையும் அறிவும், நல் நலனும் - பெண்மைக் குணங்களும்; உருகிச் சோர்வாள் - அழிந்து தளர்பவளாகிய சீதை; உயிர் உண்ண - (தனது) உயிரைக் கவரும் பொருட்டு; வயங்கும் - வந்து தோற்றமளிக்கும்; மாலை வான் - மாலைப் பொழுதோடு கூடிய வானத்தை; நோக்கி - பார்த்து; கூற்றின் வடிவு - இயமனது அஞ்சத்தக்க வடிவம்; இதுவோ என்றாள் - இதுதானோ என்று எண்ணி அஞ்சினாள்.
மலரின் மகரந்தம் விடமாகும்; தென்றல் வேற்படையாகும். தென்றலாகிய வேல் காமபாணம் தைத்த புண்ணில் நுழைந்தது. மாலையும் தென்றலும் பிறர்க்கு இன்பத்தைச் செய்வன. ஆயினும் தம் விருப்பத்திற்கு உகந்தவரைச் சேராத தலைவர் தலைவியர்க்குக் காமத்தை வளர்த்து வருத்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Dipped in the fire that is the ponds, smeared with the poison of fragrant fresh flowers,
- the moving south wind entered the wounds that Maṉmataṉ's arrows had made;
- she, her failing mind and her fine goodness melting and giving way,
- looked at the evening sky that shone to devour her life and said, 'Is this the shape of Death?'
What the poem says
Cītai's lament for the absent Irāmaṉ begins. The cool breeze from the lotus ponds, which would comfort anyone else, reaches her like a spear heated in fire and tipped with the poison of pollen, and it drives into the wounds already opened by the love god's arrows.
Weakening in mind and body, she looks up at the darkening sky and wonders whether this is what Death looks like when it comes to take a life. Evening and the southern breeze delight others but torment lovers who are apart.