கம்பராமாயணம் 617 · பால 10.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடலோ - கருங்கடலோ?; மழையோ - காள மேகமோ?; முழு நீலக்கல்லோ - பெரிய இந்திர நீலத்தின் மலையோ?; காயா நறும்போதோ - காயாச் செடியின் மணமுள்ள பூவோ; படர் பூங்குவளை நறுமலரோ - படரும் அழகுள்ள கருங்குவளையின் நறுமணப்பூவோ?; நீலோற்பலமோ - நீலோற்பல மலரோ; பானலோ - கருநெய்தல் மலரோ?; இடர்சேர் மடவார் - பலவகைத் துன்பங்களும் வந்து அடைவதற்கு இடமான இளம்பெண்களின்; உயிர் உண்பது யாதோ - உயிரைக் கவர்வது (மேற்கூறியவற்றுள்) எதுவோ?; என்று - என்று நினைந்து; தளர்வாள்முன் - (மனமும் உடம்பும்) தளர்பவளாகிய அச் சீதையின் எதிரிலே; அடல்சேர் அசுரர் - வலிமை மிக்க அசுரரின்; நிறம் போலும் அந்திமாலை - நிறத்தைப் போன்ற மாலைப் பொழுதும்; வந்தது - வந்து சேர்ந்தது.
கடல் முதலான ஏழும் இராமனது திருமேனி நிறத்துக்கு உவமையாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is it the sea, or the rain cloud, or a whole sapphire stone, or the fragrant kāyā blossom,
- or the fresh flower of the spreading lovely kuvaḷai, or the blue lotus, or the dark neytal —
- which of these is it that devours the lives of young women in distress?' As she languished so,
- before her came the evening, coloured like the one who wears the petalled garland.
What the poem says
Cītai lists seven dark-blue things — the sea, a rain cloud, a sapphire, the kāyā flower, the blue water lily, the blue lotus and the dark neytal — all standard comparisons for the colour of Irāmaṉ's body. She asks which of them it is that kills lovesick women, since everything of that hue now reminds her of him and wounds her.
As she wonders, the dusk itself arrives, dark like him, adding to her torment. The commentary's reading of the last line compares the evening's colour to that of the mighty asuras instead.