கம்பராமாயணம் 618 · பால 10.66

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின், வளர் செக்கர்ப்
பைவாய் அந்திப் பட அரவே! என் நா வளைத்துப் பகைத்தி ஆல்;
எய்வான் ஒருவன் கை ஓயான்; உயிரும் ஒன்று ஏ இனி இல்லை;
உய்வான் உற இப் பழி பூண உன்னோடு எனக்குப் பகை உண்டு ஓ.

பொருள் · Meaning in Tamil

வான் - ஆகாயத்திலே பரவிய; மைநிறத்து - கரு நிறத்தையும்; மீன் எயிற்று - நட்சத்திரங்களாகிய நச்சுப் பற்களையும்; வாடை உயிர்ப்பின் - வாடைக் காற்றாகிய பெருமூச்சையும்; வளர் செக்கர் - பரவிய செவ்வானமாகிய; பை வாய் - நச்சுப்பை கொண்ட வாயையும் உடைய; அந்தி - அந்திப் பொழுதாகிய; படம் அரவே - படத்தையுடைய நாகமே! (நீ) எக்காரணத்தால்; என்னை வளைத்து - என்னை வளைத்துப்பற்றி; பகைத்தி - என்னோடு பகைத்து (என்னை) வருத்துகிறாய்?; எய்வான் ஒருவன் - (என்மேல்) அம்புகளை எய்பவனாகிய மன்மதன்; கை ஓயான் - (எய்யும் தொழிலில்) கை சிறிதும் தளர்கிறவன் அல்லன்; உயிரும் ஒன்றே - (எனக்கு உள்ளதோ) ஓர் உயிர்தான்; இனி இல்லை - (அதனை அவன் கவர்ந்துவிட்டால்) உன்னால் கவர என்னிடம் வேறு உயிர் இல்லை; உய்வான் உற - (அம் மன்மதனிடமிருந்து) தப்பிப் பிழைக்க நான் முயன்று வருங்காலத்து; இப் பழி பூண - இப் பெண் பழியை ஏற்பதற்கு; என்னோடு உனக்கு - என்னிடம் உனக்கு; பகை உண்டோ - என்ன பகை உள்ளதோ?

உருவக அணி: அச்சம் தருவதால் இருளைக் கருநிறமாகவும், பளபளத்தலால் வானத்து மீனைப் பல்லாகவும், அனல் வீசுவதால் வாடையைப் பெருமூச்சாகவும், தன்னை விழுங்குவது போன்று இருத்தலால் செவ்வானத்தை வாயாகவும், கொல்ல வருதலால் மாலையைப் பாம்பாகவும் உருவகப்படுத்தினாள். காற்று: வடக்கிலிருந்து வீசும் காற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Hooded snake of twilight, with your sky-black body, your star fangs, your north-wind breath,
  2. and your poison-sac mouth of spreading red — you coil round me and make war on me!
  3. The one who shoots never rests his hand; I have only one life; there is no other to give.
  4. That you should take on this guilt while I struggle to survive — what enmity have you with me?'

What the poem says

Cītai now addresses the evening as a cobra. Its dark body is the night sky, its fangs are the glittering stars, its hot breath is the cold north wind that burns lovers, and its gaping red mouth with the poison sac is the sunset glow.

She pleads that she has only one life, and the love god is already shooting at it without pause. If he takes it, there will be nothing left for the snake; why should the evening also attack her and bear the sin of killing a woman? The whole verse is an extended metaphor.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mai vāṉ niṟattu mīṉ eyiṟṟu vāṭai uyirppiṉ, vaḷarcekkarp
pai vāy antip paṭa aravē! eṉṉai vaḷaittum pakaittiyāl;
eyvāṉ oruvaṉ kai ōyāṉ; uyirum oṉṟē iṉi illai;
uyvāṉ uṟa ip paḻi pūṇa uṉṉōṭu eṉakkup pakai uṇṭō.