கம்பராமாயணம் 6131 · யுத்த 2.19

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செற்றனர் எதிர் எழும் தேவர் தானவர்
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது
வெற்றியோ? பொறைகொலோ? விளம்ப வேண்டுமால்.

பொருள் · Meaning in Tamil

செற்றநர் எதிர் எழும் - சினம் கொண்டவர்களாக எதிர்த்துப் போருக்கு எழுந்து வரும்; தேவர் தானவர் - தேவர்களையும், அசுரர்களையும்; கொற்றமும் வீரமும் வலியும் - அவர்களின் வெற்றியும், வீரமும், வலிமையும்; கூட்டு அற முற்றி - ஒரு சேர அழியச் செய்து முடித்து; மூன்று உலகுக்கும் - விண்ணுலகம், மண்ணுலகம், கீழுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும்; முதல்வன் ஆயது - நீயே (ஒப்பற்ற) தலைவனாக ஆனது; வெற்றியோ - பகைவர் மேல் படை எடுத்துச் சென்ற வெற்றியினாலா? பொறை கொலோ - பொறுத்திருந்ததாலா? விளம்ப வேண்டும் - நீயே கூறுவாயாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That you crushed altogether the conquest, valour and strength
  2. of the gods and Dāṉavas who rose against you in wrath,
  3. and became lord of all three worlds,
  4. was it by victory, or by patience? You must say.

What the poem says

The commander asks Irāvaṇaṉ a pointed question: did he become master of the three worlds by marching out and defeating gods and demons, or by sitting patiently at home? The answer is obvious, and so is the lesson.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṟṟanar etir eḻum tēvar tāṉavar
koṟṟamum vīramum valiyum kūṭṭu aṟa
muṟṟi mūṉṟu ulakukkum mutalvaṉ āyatu
veṟṟiyō? poṟaikolō? viḷampavēṇṭumāl.