கம்பராமாயணம் 6133 · யுத்த 2.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1போயின குரங்கினைத் தொடர்ந்துபோய் அவண்
ஏயினர் உயிர்குடித்து எவ்வம் தீர்கிலம்;
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்
ஓயும் நம் வலி என உணரக் கூறினான்.
பொருள் · Meaning in Tamil
போயின குரங்கினைத் தொடர்ந்து போய் - இலங்கை பாழாகச் செய்து சென்ற குரங்கைத் தொடர்ந்து சென்று; இவண் ஏயினர் உயிர் குடித்து - இங்கு அந்தக் குரங்கை ஏவிய மனிதர்களின் உயிரைப் பருகி; எவ்வம் தீர்கிலம்- நமக்கு நேர்ந்த பழியைப் போக்கோமாய்; வாயினும் மனத்தினும் - சொல்லிலும் நினைப்பிலும்; வெறுத்து வாழ்து மேல் - வெறுப்பைக் காட்டி வாழ்வோமாயின்; நம் வலி ஓயும் - நமது வலிமை குறைவாகும்; என உணரக் கூறினான் - என்று, உணருமாறு கூறினான்.
எவ்வம்-பழி வாய் சொல்லையும், மனம் நினைப்பையும் உணர்த்தும். ஓய்தல்- குறைதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If we do not follow the monkey that has gone and, drinking the life
- of those who sent it here, end our disgrace,
- if we go on living, showing our resentment only in word and thought,
- our strength will wane; so he spoke, to make him understand.
What the poem says
The commander concludes: unless the demons pursue the monkey back to his masters and kill them, wiping out their shame, and merely grumble in word and thought, their power will decline.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōyiṉa kuraṅkiṉait toṭarntu pōy ivaṇ
ēyiṉar uyir kuṭittu evvam tīrkilam;
vāyiṉum maṉattiṉum veṟuttu vāḻtumēl
ōyum nam vali eṉa uṇarak kūṟiṉāṉ.