கம்பராமாயணம் 6134 · யுத்த 2.22

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மற்று அவன் பின் உற மகோதரப் பெயர்க்
கல்தடம் தோளினன் எரியும் கண்ணினான்
முற்று உற நோக்கினன் முடிவும் அன்னதால்
கொற்றவ கேள் என இனைய கூறினான்.

பொருள் · Meaning in Tamil

மற்று அவன் பின் உற - படைத்தலைவன் இவ்வாறு கூறியபின்பு; மகோதரம் பெயர் - மகோதரன் என்னும் பெயர் உடையவனும்; கல் தடம் தோளினன் - மலை போன்ற பெரிய தோள்களை உடையவனும்; எரியும் கண்ணினால் - கோபத்தீ மூண்டெழும் கண்களை உடையவனும் ஆகிய அமைச்சன் எழுந்து; முற்றுற நோக்கினான் - நடந்த செயல் முழுதையும் ஆய்ந்து, கொற்றவ -அரசே; முடிவும் அன்னதால் - படைத் தலைவன் கூறியதே முடிந்த முடிபு எனினும்; கேள் - நான் உரைப்பதையும் கேட்பாயாக; என இனைய கூறினான் - என்று பின்வருமாறு கூறலானான்.

மற்று - வினை மாற்றுப் பொருளில் வந்த அசை. 'அவன்' என்று

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After him, the one named Makōtaraṉ,
  2. with shoulders broad as rock, looked over the whole matter
  3. with blazing eyes and said, The end of it is just that;
  4. yet listen, O king; and he said these things.

What the poem says

Next to speak is Makōtaraṉ, a minister with massive shoulders and eyes burning with anger. He agrees with the commander's conclusion but asks the king to hear him as well.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟu avaṉ piṉṉuṟa makōtarap peyark
kal taṭan tōḷiṉaṉ eriyum kaṇṇiṉāl
muṟṟuṟa nōkkiṉāṉ muṭivum aṉṉatāl
koṟṟava kēḷ eṉa iṉaiya kūṟiṉāṉ.