கம்பராமாயணம் 6135 · யுத்த 2.23

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவரும் அடங்கினர் இயக்கர் சிந்தினர்
தாஅரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர்
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர்
மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய்.

பொருள் · Meaning in Tamil

மொய்ம்பினோய் உனக்கு - வலிமை மிக்கவனே! உனக்கு, தேவரும் அடங்கினர் - தேவர்களும் அஞ்சி அடங்கி விட்டனர்; இயக்கர் சிந்தினர் - இயக்கர்கள் வலிமை இழந்து விட்டார்கள்; தாவரும் தானவர் - கேடில்லாத அசுரர்களும்; தருக்குத் தாழ்ந்தனர் - ஆணவம் அடங்கினர்; யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் - எல்லோரும் 'கடவுளர்' என்று வணங்கும்; மேன்மையர் மூவரும் - பெருமை மிக்க அரி, அரன், அயன் என்னும் மும்மூர்த்திகளும்; உனக்கு ஒதுங்கினர் - உன்னை எதிர்த்து நிற்க இயலாது விலகிப் போனார்கள்.

தேவரும், இயக்கரும், தானவரும் இராவணனது திக்கு விஜயத்தின் போது தோற்று அடங்கி விட்ட செய்தி உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. தருக்கு, மொய்ம்பு-வலிமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods have submitted; the Yakṣas are scattered;
  2. the undying Dāṉavas have had their pride brought low;
  3. the three exalted ones whom all worship as lords
  4. have stood aside for you, O mighty one.

What the poem says

Makōtaraṉ flatters Irāvaṇaṉ by recalling his conquests: gods, Yakṣas and the demon Dāṉavas have all been humbled, and even the divine trinity of Viṣṇu, Śiva and Piramaṉ avoid confronting him. The commentary notes that these conquests are told in the Uttara Kāṇḍa.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvarum aṭaṅkiṉar iyakkar cintiṉar
tā varum tāṉavar tarukkut tāḻntaṉar
yāvarum iṟaivar eṉṟu iṟaiñcum mēṉmaiyar
mūvarum otuṅkiṉar uṉakku moympiṉōy.