கம்பராமாயணம் 6136 · யுத்த 2.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏற்றம் என் பிறிது இனி? எவர்க்கும் இன்னுயிர்
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை
கூற்றுவான் தன் உயிர் கொள்ளும் கூற்று எனத்
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால்.
பொருள் · Meaning in Tamil
எவர்க்கும் இன்னுயிர் மாற்றுறும் - எத்தகைய வலியவர்களின் இனிய உயிரையும் மாற்றி அழிக்கும்; முறைமை சால் வலியின் மாண்பமை கூற்றுவன் - இயல்பு வாய்ந்த வலிமையின் பெருமையமைந்த எமனும்; தன்னுயிர் கொள்ளும் - தனது உயிரைக் கவரும்; கூற்று எனத் தோற்று - எமன் என்று தோல்வியுற்று; நின் ஏவல் தன் தலையில் சூடும் - உனது கட்டளையைத் தன் தலைமேல் தாங்கிச் செய்வான்; என்றால் இனி பிறிது ஏற்றம் என் - இனி இதை விடவும் வேறு பெருமை என்ன இருக்கிறது?
ஆங்கிலம் · English translationAI
Translation
- What further glory is there? Even Death, of fitting power and greatness,
- who takes away the sweet life of all,
- yields, as though you were the death that would take his own life,
- and wears your command upon his head.
What the poem says
Makōtaraṉ continues: even Yama, god of death, who takes every life, submits to Irāvaṇaṉ as if Irāvaṇaṉ were his own death, and obeys his orders. There can be no greater glory.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟṟam eṉ piṟitu iṉi? evarkkum iṉ uyir
māṟṟuṟum muṟaimai cāl valiyiṉ māṇpu amai
kūṟṟuvaṉ taṉ uyir koḷḷum kūṟṟu eṉat
tōṟṟu niṉ ēval taṉ talaiyil cūṭumāl.