கம்பராமாயணம் 6137 · யுத்த 2.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெள்ளி அம்கிரியினை - பனியால் வெண்மை நிறத்தை உடைய அழகிய கைலாய மலையை; விடையின் பாகனோடு அள்ளி - அம்மலையில் வாழும் காளை வாகனத்தை உடைய சிவபெருமானுடன் அள்ளி; விண் தொட எடுத்து - விண்ணைத் தொடும்படி தூக்கி நிறுத்தி; ஆர்த்த ஆற்றலாய் - ஆர்ப்பரித்த ஆற்றல் மிக்கவனே; சுள்ளியில் இருந்து உறை - மரத்தின் சுள்ளிகளிலே வசிக்கும்; குரங்கின் தோள் வலிக்கு - ஒரு குரங்கின் தோளாற்றலுக்கு; நின்புயத்தை எம்மொடும் - உனது தோள் வலிமையை எங்களது ஆற்றலுடன் சேர்த்து; எள்ளுதி போலும் - இகழ்ந்து பேசுவாய் போலும்.
வெள்ளியங்கிரி - கைலாயமலை. அள்ளுதல் - கையில் எடுத்தல். இருந்து உறை - தங்கி வாழும். 'எள்ளுதி போலும்' என்ற இடத்தில் 'போல்' என்பது உரையசை ஒப்பில் போலி என்பர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- You of the power that scooped up the silver mountain together with the rider of the bull,
- lifted it to touch the sky and roared!
- Against the shoulder-strength of a monkey that lives among twigs
- you seem to be scorning your arms along with us.
What the poem says
Makōtaraṉ recalls Irāvaṇaṉ's most famous feat, lifting Mount Kailāsa, the silver mountain, with Śiva, rider of the bull, upon it. How can such a hero think so little of his own arms, and of his warriors, that a twig-dwelling monkey troubles him?