கம்பராமாயணம் 6138 · யுத்த 2.26

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின்
கண்ணினின் நீங்கினர் யாவர்? கண்டவர்
நண்ணரும் வலத்தினர் யாவர்? நாயக!
எண் இலர் இறந்தவர் எண்ணல் ஆவதோ?

பொருள் · Meaning in Tamil

நாயக - எமது தலைவனே! மண்ணினும் வானினும் - மண்ணுலகிலும், விண்ணுலகிலும்; மற்றும் முற்றும் - மற்றும் வேறுலகங்கள் முழுவதிலும்; நின் கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர் - உனது கண்ணுக்குப் புலப்படாதிருப்பவரைக் கண்டவர்கள் யார்? நண்ணரும் வலத்தினர் யாவர்? - அவ்வாறு கண்டவருள்ளும் உன்னால் நெருங்கமுடியாத வலிமை உடையவர் யாருண்டு; எண்ணிலர் - உன்னை மதித்து எண்ணிப் பார்க்காதவர்களாய்; இறந்தவர் - போரிட்டு முடிந்தவர்கள்; எண்ணில் ஆவரோ? - இத்தனை பேர் என எண்ண முடிந்தவரோ?

'கண்' என்பதைக் கண்ணோட்டம் எனக் கொண்டு, மண்ணிலும், விண்ணிலும் மற்றும் முற்றும் வாழ்பவர் உனது கண்ணோட்டத்தால் வாழ்பவரே எனவும் பொருள் கூறலாம். எண்ணல்- மதித்தல். வலம்- வலிமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On earth, in heaven and in all the other worlds, who is there
  2. that has escaped your eye? Among those you have seen,
  3. who has might you cannot approach, O lord?
  4. Those who did not reckon with you and perished, can they even be counted?

What the poem says

Nothing in any world escapes Irāvaṇaṉ's sight, no one he has seen is beyond his power, and those who ignored him and died are past counting. The commentary notes that eye can also mean grace: all beings live only by Irāvaṇaṉ's favour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇiṉum vāṉiṉum maṟṟum muṟṟum niṉ
kaṇṇiṉum nīṅkiṉar yāvar? kaṇṭavar
naṇṇa arum valattiṉar yāvar? nāyaka!
eṇṇilar iṟantavar eṇṇil āvarō?