கம்பராமாயணம் 6139 · யுத்த 2.27

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இடுக்கு இவண் இயம்புவது இல்லை; ஈண்டு எனை
விடுக்குவை ஆம் எனில் குரங்கை வேர் அறுத்து
ஒடுக்கரு மனிதரை உயிர் உண்டு உன் பகை
முடிக்குவென் யான்'என முடியக் கூறினான்.

பொருள் · Meaning in Tamil

இடுக்கு இவண் இயம்புவதில்லை - இங்கே சொல்லத் தகுந்த துன்பம் எதுவும் இல்லை; ஈண்டு எனை விடுக்குவை யாம் எனின் - இப்போது என்னைப் போருக்குச் செல்ல விடுவாயானால், குரங்கை வேர் அறுத்து - குரங்கினத்தையே வேருடன் அழித்து; ஒடுக்கரு மனிதரை உயிர் உண்டு - அடக்குவதற்கரிய அம்மானிடரை உயிர் குடித்து; உன் பகை முடிக்குவென் யான் என - உனது பகையை முடிப்பேன் யானே; என முடியக் கூறினான் - என்று முடிவாகக் கூற வேண்டியவற்றைக் கூறினான்.

இடுக்கு- துன்பம் ஒடுக்க அரும்- அடக்க அரிய மனிதர். இராம, இலக்குவர் ஈண்டு-இப்போது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There is no trouble here worth speaking of; if you send me
  2. now, I will cut the monkeys out by the root,
  3. drink the lives of the men hard to subdue, and finish
  4. your enmity myself; so he said, and finished.

What the poem says

Makōtaraṉ ends by volunteering: there is nothing to worry about; let Irāvaṇaṉ send him, and he will wipe out the monkey race, kill the two men and settle the king's feud on his own.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭukku ivaṇ iyampuvatu illai; īṇṭu eṉai
viṭukkuvaiyām eṉiṉ kuraṅkai vēr aṟuttu
oṭukka aru maṉitarai uyir uṇṭu uṉ pakai
muṭikkuveṉ yāṉ' eṉa muṭiyak kūṟiṉāṉ.