கம்பராமாயணம் 6140 · யுத்த 2.28

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் எல்வையின்
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறினான்
அச் சிரத்தைக்கு ஒரு பொருள் இன்று ஆயினும்
பச்சிரத்தம் பொழி பருதிக் கண்ணினான்.

பொருள் · Meaning in Tamil

இச்சிரத்தவன் - இந்தத் தலைமை பொருந்திய மகோதரன்; உரைத்து இறுக்கும் ஏல்வையின் - இவ்வாறு கூறி முடிக்கும் சமயத்திலே; பச்சிரத்தம் பொழி - பச்சை இரத்தம் பொழிகின்ற; பருதி கண்ணினான் - சூரியனைப் போன்ற கண்களை உடையவனாகிய, வச்சிரத்து எயிற்றவன் - வச்சிரதந்தன் என்பவன்; அச்சிரத்தைக்கு - அவன் கூறும் அந்த உறுதி மொழிகளுக்கு; ஒரு பொருள் இன்று ஆயினும் - ஒரு பயனும் இல்லை என்றாலும்; வல்லை கூறினான் - விரைந்து கூறுவானானான்.

சிரத்தவன் - தலைமை வாய்ந்தவன் என்றது மகோதரன். ஏல்வை-சமயம். சிரத்தை-உறுதி இங்கு உறுதி மொழியை உணர்த்தும். பச்சைரத்தம் - பச்சிரத்தம் எனத் திரிந்தது. வச்சிரம் போன்ற பற்களை உடையவன் என்பதால் வச்சிரதந்தன் எனப்பட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As this chief was speaking and drawing to an end,
  2. the one with teeth like the thunderbolt spoke up at once,
  3. though there was no point at all to that resolve of his,
  4. he whose sun-like eyes poured out fresh blood.

What the poem says

Makōtaraṉ's boast is no sooner finished than Vacciratantaṉ, whose name means thunderbolt-toothed and whose eyes glow like a blood-red sun, breaks in, though the poet notes his bold resolve will come to nothing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ic cirattavaṉ uraittu iṟukkum ēlvaiyiṉ
vaccirattu eyiṟṟavaṉ vallai kūṟiṉāṉ
ac cirattaikku oru poruḷ iṉṟu āyiṉum
paccirattam poḻi parutik kaṇṇiṉāṉ.