கம்பராமாயணம் 6141 · யுத்த 2.29

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இனி, போய் - இனிச் சென்று; மனிசரை, குரங்கை - அந்த மனிதர்களையும், குரங்குகளையும்; பூமியில் கைகளால் தேயுமின் - நிலத்தோடு சேர்த்து கைகளால் தேய்த்துக் கொல்லுங்கள்; தின் மின் - அவர் உடல்களைத் தின்னுங்கள்; என்று - என்றுகூறி; எமை ஏயினை இருக்குவதன்றி - எங்களை ஏவிவிட்டு, வாளா இருப்பதல்லாது; என் இனி ஆயும் இது - என்ன ஆராய்ச்சி வேண்டியுள்ளது? எம் வயின் - எங்கள் மேல்; அயிர்ப்பு உண்டாம் கொலோ - ஏதேனும் சந்தேகம் உண்டோ?

போயினி என்பதை இனிப் போய் என இயைக்க. இப்போதே ஏயினை-ஏவி முற்றெச்சம். இருக்குவது - இருப்பது இனி-இனி மேலாவது என்பதும் பொருந்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Go now and grind the men and the monkeys into the earth
  2. with your hands and eat them, so command us
  3. and sit at ease; what else is there to ponder?
  4. Can there be any doubt about us?

What the poem says

Vacciratantaṉ tells Irāvaṇaṉ there is nothing to deliberate. He need only order his warriors to crush the men and monkeys into the ground and devour them, then sit back. Surely he does not doubt their ability?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōy iṉi maṉicaraik kuraṅkaip pūmiyil
tēyumiṉ kaikaḷāl tiṉmiṉ' eṉṟu emai
ēyiṉai irukkuvatu aṉṟi eṉ iṉi
āyum itu? emvayiṉ ayirppu uṇṭāmkolō?