கம்பராமாயணம் 6143 · யுத்த 2.31

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நில் நில்'என்று அவன் தனை விலக்கி'நீ இவை
என்முனும் எளியர்போல் இறுத்தியோ?'எனா
மன்முகம் நோக்கினன் வணங்கி வன்மையால்
துன்முகன் என்பவன் இனைய சொல்லினான்.

பொருள் · Meaning in Tamil

துன்முகன் என்பவன் நில் நில் என்று அவன்தனை விலக்கி - துன்முகன், நில் நில் என்று அந்த வச்சிரதந்தனை விலக்கி; நீ இவை என்முனும் எளியர் போல் இருத்தியோ - (இராவணனை வணங்கி) நீ இத்தகைய சொற்களை எனக்கு முன்னால் எளியவரைப் போலக் கூறி இருக்கப் போமோ? எனா, மன்முகம் நோக்கினன் வணங்கி - என்று கூறி, அரசனான அவனை வணங்கி, நோக்கி; வன்மையால் - தனது வலிமை புலப்பட (சினம் கொண்டு), இனைய சொல்லினான் - இவ்விதமாகப் பேசலானான்.

அவன்-வச்சிரதந்தன், மன் - அரசன் (இராவணன்) என்றது பின்னர் கூறுவனவற்றை. 'அடியவர் முன் தலைவர் குறை புலப்பட பேசுதல் கூடாது' என்பதால் 'என்முனும் எளியர் போல் இருத்தியோ' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Stop, stop, he said, holding him back; Will you sit there like a weakling
  2. saying such things even in front of me?
  3. and looking at the king's face, bowing, with force,
  4. the one named Tuṉmukaṉ spoke these words.

What the poem says

Another warrior, Tuṉmukaṉ, cuts Vacciratantaṉ short, rebuking him for talking like a weakling in front of him, since servants should not speak of their master's weakness. Then, bowing to Irāvaṇaṉ, he speaks forcefully.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nil nil' eṉṟu avaṉtaṉai vilakka 'nī ivai
eṉ muṉum eḷiyarpōl iruttiyō?' eṉā
maṉ mukam nōkkiṉaṉ vaṇaṅki vaṉmaiyāl
tuṉmukaṉ eṉpavaṉ iṉaiya colliṉāṉ.