கம்பராமாயணம் 6144 · யுத்த 2.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திக்கயம் வலியில - (இராவணனுக்கு) திக்கு யானைகள் வலிமை இல்லாதவாயின; தேவர் மெல்லியர் - தேவர்களும் தோற்று மெலிந்தனர்; முக்கணான் கயிலையும் - முக்கண் மூர்த்தியான சிவபிரான் வாழும் கைலாயமலையும்; முரண் இன்று ஆயது - வலிமை இல்லாதது ஆயிற்று; மக்களும் குரங்குமே- மனிதர்களும் குரங்குகளுமே; வலியர் ஆம் எனின் - வலிமை உடையவர்கள் என்றால்; இராவணனுக்கு அமைந்த ஆற்றல் - இலங்காதிபனான இராவணனுக்கு அமைந்த வலிமை; அக்கட - ஆச்சரியப்படத்தக்க தொன்றே.
திக்கு + கயம் - திக்கயம். முரண் - வலிமை. 'அக்கட' என்பது அதிசயம் என்ற பொருள் கொண்ட திசைச்சொல் தெலுங்குச் சொல் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The elephants of the quarters had no strength; the gods were feeble;
- even Kailāsa of the three-eyed one had no power to resist;
- if men and monkeys alone are strong,
- how marvellous is the might that Irāvaṇaṉ possesses!
What the poem says
Tuṉmukaṉ points out the absurdity: the elephants that hold up the world's directions, the gods and even Śiva's Mount Kailāsa could not withstand Irāvaṇaṉ, and now men and monkeys are supposed to be too strong for him. Akkaṭa, an exclamation of wonder, is said to be a Telugu word.