கம்பராமாயணம் 6146 · யுத்த 2.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்ணிய மந்திரக் கருமம் காவல!
மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றும்; நாம்
உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல்
திண்ணிய அரக்கரில் தீரர் யாவரே.
பொருள் · Meaning in Tamil
காவல - அசுரர் குல காவலனே! கண்ணிய மந்திரக் கருமம் - நாம் கருதிய மந்திராலோசனை ஆகிய காரியம்; மண்ணியல் மனிசரும் - நிலத்திலே நடந்து திரியும் இயல்புடைய மனிதர்களும்; குரங்கும் - குரங்குகளும்; மற்றவும் - பிறவற்றையும் பற்றியதாகும்; உண்ணிய அமைந்த - அவையெல்லாம் நாம் தின்பதற்கு அமைந்தவையாகும்; உணவுக்கு உட்குமேல்- உணவுப்பொருளுக்கு நாம் பயந்தோம் என்றால், திண்ணிய அரக்கரில் - வலிமை மிக்க அரக்கராகிய நம்மைவிட; தீரர் யாவரே - வீரர்கள் யாருள்ளார்?
கண்ணுதல்-கருதுதல். உட்குதல்-அஞ்சுதல் அரக்கர்களில் தீரர் யாவரே என்றது இகழ்ச்சி குறிப்பாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The business of counsel we have in mind, O guardian,
- concerns men who walk the earth, monkeys and the like;
- they are fit to be eaten; if we shrink from our food,
- who would be heroes among the mighty demons?
What the poem says
Tuṉmukaṉ mocks the whole council: men and monkeys are simply food for demons. If demons are afraid of their dinner, there are no heroes left among them.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṇiya mantirak karumam kāvala!
maṇ iyal maṉicarum kuraṅkum maṟṟavum;
uṇṇiya amaintaṉa uṇavukku uṭkumēl
tiṇṇiya arakkariṉ tīrar yāvarē.