கம்பராமாயணம் 6147 · யுத்த 2.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வருவதும் - நாம் வாழும் ஊராகிய இலங்கை மாநகருக்கு வருவதும்; எரி உற மடுப்பதும் - ஊருக்குத் தீ இடுவதும்; எதிர்ந்துளோர் பட - எதிர்த்தவர் இறக்கும்படி; பொருதொழில் - போர் புரியும் தொழில்கள்; யாவையும் புரிந்து - எல்லாவற்றையும் செய்து; போவதும் - ஊரைக் கடந்து தப்பிப் போவதும்; குரங்கு - ஒரு குரங்கு செய்யும் செயலாயிற்று; கடந்து நம் வாழ்க்கை ஊர் - நாம் வாழும் ஊரைக்கடந்து; இராக்கதர்க்கு - அரக்கர்களாகிய நமக்கு; ஆழி நீந்துதல் - கடலை நீந்திக் கடப்பதென்பது; அரிது கொல் - செய்ய இயலாத அரிய செயலோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- To set fire to the city, to wage all kinds of war
- so that those who opposed it fell, to leave
- and to come, all this a monkey did; is it hard for demons
- to cross beyond our own city and swim the sea?
What the poem says
A monkey crossed the ocean, burned the city, killed those who fought it and left again. Tuṉmukaṉ asks whether the demons cannot do as much: leave their own city and cross the sea to attack.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eri uṟa maṭuppatum etirntuḷōr paṭap
poru toḻil yāvaiyum purintu pōvatum
varuvatum kuraṅku; nam vāḻkkai ūr kaṭantu
aritukol irākkatarkku āḻi nīntutal?