கம்பராமாயணம் 6148 · யுத்த 2.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வந்து நம் இருக்கையும் - இலங்கைக்கு வந்து நாம் வாழும் நமது இருப்பிடங்களையும்; அரணும் - இலங்கைக்குப் பாதுகாப்பான அரண்களையும்; வன்மையும் - நமது வலிமையையும்; வெந்தொழில் - கொடிய போர்த்தொழில் வல்ல; தானையின் விரிவும் - சேனையின் பரப்பையும்; வீரமும் - அதன் ஆற்றலையும்; சிந்தையின் உணர்பவர் - மனத்தினால் அறிய வல்லவர்கள்; உய்ந்து தம் உயிர் கொடு - நம்மிடம் பகைத்து பிழைத்து உயிருடன் சென்றவர்கள்; இவ்வுலகத்துள் உளார் - இவ்வுலகத்திலே இருப்பவர்கள்; யாவரே சிலர் - சிலரேனும் யார் இருக்கிறார்கள்?
வந்து - இலங்கைக்கு வந்து. இருக்கை - இருப்பிடம் வெம்தொழில்- கொடிய போர்த்தொழில். கொண்டு என்பது கொடு என விகாரமாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Who are the few who have come and known in their minds
- our dwelling, our fortress, our might,
- the spread of our army of fierce deeds, and its valour,
- and have escaped with their lives and still live in this world?
What the poem says
Tuṉmukaṉ boasts that no one who has come to Ilaṅkai and taken the measure of its homes, fortifications, strength and vast army has ever escaped alive to tell of it.