கம்பராமாயணம் 6149 · யுத்த 2.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒல்வது நினையினும் - பொருந்தும் விதத்தை நினைத்துப் பார்த்தாலும்; உறுதி ஓரினும் - நமக்கு உறுதி பயப்பனவற்றை ஆராயினும்; வெல்வது விரும்பினும் - நாம் வெற்றியடைய விரும்பினாலும்; வினையம் வேண்டினும் - அந்த வெற்றிக்குரிய வினையத்தை வேண்டினாலும்; செல்வது அங்கு - செல்ல வேண்டியது அங்கேதான்; அவர் உழை சென்று - அந்தப் பகைவர் இருக்குமிடம் சென்று; தீர்ந்து அறக் கொல்வது கருமம் - அவர்கள் இறந்து அழியும்படி கொல்வதே செய்யவேண்டிய செயலாகும்; என்று உணரக் கூறினான் - என்று இராவணன் உணரும்படி கூறினான்.
ஒல்வது-பொருந்துவது. உறுதி-நன்மை. வினையம்-சூழ்ச்சித்திறம். கருமம்- செய்யத்தக்க காரியம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If you think of what is fitting, if you weigh what is sure,
- if you desire victory, if you want a stratagem,
- the way to go is there: to go to where they are and kill them
- until they are wholly finished; so he spoke, to make it plain.
What the poem says
Tuṉmukaṉ concludes that whatever the measure, whether prudence, advantage, victory or strategy, the answer is the same: march to the enemy and annihilate them.