கம்பராமாயணம் 6150 · யுத்த 2.38

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாபெரும் பக்கன் என்று ஒருவன் - மகா பார்சுவன் என்னும் பெயர் கொண்ட ஒருவன்; வன்மையான் - ஒப்பற்ற வலிமை மிக்கவன்; காவலன் கண் எதிர் - அரசனான இராவணன் கண் எதிரிலேயே; அவனை கை கவித்து - துன்முகனை நீ கூறியது போதுமெனக் கை கவித்து; யாவது உண்டு இனி நமக்கு - (ஒரு குரங்கு செய்த காரியத்துக்கு வருந்தி ஆலோசனை செய்வதென்றால்) இனி நமக்கு என்ன பெருமை இருக்கும்? கோவமும் வன்மையும் குரங்குக்கே - கோவமும் வலிமையும் குரங்குக்கே உரியதோ? நமக்கில்லையோ? என்னச் சொல்லினான் - எனவும் கூறலானான்.

மகாபார்சுவன் என வான்மீகி கூறியதை 'மாபெரும் பக்கன்' எனச் செய்துள்ளார் கம்பர் அவன் - துன்முகன். கைகவித்தல் - கை அமர்த்தல், கோவம்-கோபம் எதுகைக்கு ஏற்ப கோவம் என்றாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the king's eyes, with a raised hand to check him,
  2. What is left for us now? he said;
  3. Do anger and strength belong to the monkey alone?
  4. so said one called Māperumpakkaṉ, a man of might.

What the poem says

Māperumpakkaṉ, Kampaṉ's rendering of Vālmīki's Mahāpārśva, waves Tuṉmukaṉ down and adds his own scorn: if the demons must hold councils over what one monkey did, what honour is left to them? Are rage and strength the monkeys' monopoly?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāvalaṉ kaṇ etir avaṉaik kai kavittu
'yāvatu uṇṭu; iṉi namakku? eṉṉac colliṉāṉ
'kōvamum vaṉmaiyum kuraṅkukkē' eṉā
māperumpakkaṉ eṉṟu oruvaṉ vaṉmaiyāṉ.