கம்பராமாயணம் 6152 · யுத்த 2.40

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மானிடர் ஏவுவார் குரங்கு வந்து இவ் ஊர்
தான் எரிமடுப்பது நிருதர் தானையே
ஆனவர் அது குறித்து அழுங்குவார்
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ?

பொருள் · Meaning in Tamil

மானுடர் ஏவுவார்- மானிடர்கள் குரங்கை ஏவி விடுவார்கள்; குரங்கு வந்து - அந்தக் குரங்கு இங்கு வந்து; இவ்வூர்தான் எரி மடுப்பது - இந்த ஊருக்குத் தான் தீயை வைப்பது; நிருதர் தானையே ஆனவர் - அதற்கு அசுரப்படையாய் இருப்பவர்கள்; அது குறித்து அழுங்குவார் எனின் - அதைப் பற்றி நினைத்து வருந்துபவர் என்றால்; மேல் நிகழ்தக்கன - இனிமேல் நிகழத்தக்கதா யிருப்பதை; விளம்ப வேண்டுமோ - நான் விரித்துக் கூற வேண்டுமோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The men send it, the monkey comes and sets fire
  2. to this very city, and if those who are the demon army
  3. grieve over that,
  4. need I tell what is likely to happen next?

What the poem says

If men can send a monkey to burn Ilaṅkai while the demon army merely mourns, Māperumpakkaṉ says, it is obvious what will follow: worse humiliation and ruin.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṉuṭar ēvuvār kuraṅku vantu iv ūr
tāṉ eri maṭuppatu nirutar tāṉaiyē
āṉavar atu kuṟittu aḻuṅkuvār eṉiṉ
mēl nikaḻtakkaṉa viḷampa vēṇṭumō?