கம்பராமாயணம் 6154 · யுத்த 2.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற - பிசாசன் என்னும் பெயர் உடைய, பெய்கழல் நிசாசரன் - வீரக்கழல் அணிந்த அரக்கன்; உருப்புணர் நெருப்பின் நீர்மையான் - வடிவத்தில் அசுரன் எனினும் நெருப்பைப் போன்ற தன்மை உடையவன்; அரசன் செய்வினை உசாவினன் - அரசன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் கேட்டான்; உட்கினன் - ஒரு குரங்கால் இலங்கை அழிந்ததை எண்ணி நாணினான்; நாம் திசை திசை போதும் - நாம் எங்காவது வேறு வேறு திசைகளுக்குச் செல்வோம்; ஒழிதும் வாழ்வு என்றான் - சென்று நமது வாழ்வைப் போக்கிக் கொள்வோம் என்றான்.
பிசாசன் நெருப்பின் நீர்மையான் - அரசன் செய்வினை உசாவினான். உட்கினன் திசா திசை போதும் வாழ்வு ஒழிதும் என்றான் என இயையும். இரவில் இயங்குவோர் என்ற கருத்தில் அரக்கரை நிசாசரர் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- We had better go off in all directions; the king asks
- what deed to do, and is ashamed; let us give up living, he said,
- he who had won the name Picācaṉ, the night-roamer
- of the strong anklets, with the nature of fire that has taken shape.
What the poem says
Picācaṉ, a demon fiery as flame in bodily form, speaks sarcastically: the king is asking what to do and is ashamed over a monkey, so the demons might as well scatter to the four corners and end their lives. Night-roamer, nicācaraṉ, is a common name for the demons.