கம்பராமாயணம் 6155 · யுத்த 2.43

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வு உறு
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால்
சீரியர் மனிதரே; சிறியம் யாம்'எனச்
சூரியன் பகைஞன் என்று ஒருவன் சொல்லினான்.

பொருள் · Meaning in Tamil

சூரியன் பகைஞன் என்று ஒருவன் - சூரிய சத்துரு என்ற பெயர் கொண்ட அரக்கவீரன்; ஆரியன் தன்மை ஈது ஆயின்- மேலோனாகிய நம் மன்னன் தன்மை இதுவென்றால், ஆய்வுறு காரியம் ஈது எனின்- நாம் எல்லாம் கூடி ஆராய்ச்சி செய்யும் காரியம் இது என்றால்; கண்ட ஆற்றினால்- இது கொண்டு ஆயும் நெறியினால்; சீரியர் மனிதரே - சிறந்தவர்கள் மனிதரே ஆவர்; யாம் சிறியம் - அரக்கராகிய நாம் சிறியவர்களே யாம்; எனச் சொல்லினான் - என்று வருந்திக் கூறலானான்.

ஆரியன்-மேலோன்; இங்கு இராவணனை உணர்த்தும். அற்ப மனிதர்களையும், குரங்கையும் அழிப்பதற்காக ஆராய்வது செயல் எனின், மனிதரே உயர்ந்தவராய் விடுவர்; அரக்கர் சிறியர் என்றாகிவிடுமே என்பது சூரியன் பகைஞனின் வருத்தம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If this is the nature of our noble lord, if this is the matter
  2. that calls for inquiry, then by the way we have seen it go,
  3. the men are the great ones and we are small,
  4. said one called Cūriyaṉpakaiñaṉ.

What the poem says

Cūriyaṉpakaiñaṉ, Enemy of the Sun, laments that if the great Irāvaṇaṉ must hold a council about mere men and monkeys, the men have become the superior race and the demons the lesser.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āriyaṉ taṉmai ītu āyiṉ āyvuṟu
kāriyam ītu eṉiṉ kaṇṭa āṟṟiṉāl
cīriyar maṉitarē; ciṟiyam yām' eṉā
cūriyaṉpakaiñaṉ eṉṟu oruvaṉ colliṉāṉ.