கம்பராமாயணம் 6157 · யுத்த 2.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புகை நிறக் கண்ணனும் - மேல் குறிப்பிடப்பட்டவர்களேயன்றிப் புகைநிறக் கண்ணன் (தூம்ராட்சன்) என்னும் அரக்கனும்; சிகை நிறச் சூலிதன் திறத்துச் செல்லினும் - நம் தலைமுடி போல் சிவந்த நிறமுடையவனாய்த் திரிசூலம் ஏந்திய சிவனை எதிர்த்துப் போர் செய்வதுகூட,; நகை உடைத்தாம் - நம் வீரப் பெருமை சிரிப்புக்கு இடமாகி விடும்; தொகை நிலைக் குரங்குடை - கூட்டமான குரங்குப் படையைக் கொண்டுள்ள; மனிதர் சொல்லி என் - மனிதர்கள் மேல் போர்செய்வது பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அமர் செய்தல் நன்று - இப்போது வேறு வழி இல்லாமையால் அந்த மனிதர்களோடு போர் செய்வதே நல்லது; எனாப் புகன்று - என்று சொல்லி; பொங்கினான் - ஆத்திரத்தால் பொங்கினான்.
தூம அட்சன் - புகை நிறக் கண்ணன். சிவபிரானை எதிர்த்துப் போர் செய்வதே தன் இனத்துக்குக் கேவலமாயிருக்க, குரங்குப் படை கொண்ட மனிதரோடு போர் செய்ய வேண்டி வந்ததே என்பது புகை நிறக் கண்ணன் பொங்கியதற்குக் காரணம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Why speak of men who have a host of monkeys?
- Even going against the one with the trident, red like our hair,
- would make war a joke; but battle is best, so
- said Smoke-Eye too, and boiled over.
What the poem says
Pukainiṟakkaṇṇaṉ, Smoke-coloured Eye, Kampaṉ's rendering of Dhūmrākṣa, says that even fighting Śiva himself would be beneath the demons' dignity, let alone men with a monkey army; yet since there is no other way, war it must be. He seethes with fury at the indignity.