கம்பராமாயணம் 6158 · யுத்த 2.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புற்று உறை அரவு என - புற்றில் வாழும் நாகப்பாம்பைப் போல; புழுங்கும் நெஞ்சினார்- வெந்து புழுங்கும் மனம் உடையவரான; மற்றையோர்களும் - மற்றும் உள்ள அரக்க வீரர்களும்; மற்று அவன் பின் உற - அந்தத் தூம்ராட்சன் கூறிய பின்பு; இற்று இதுவே நலம் - இத்தகைய இதுவே நன்மையாகும்; எண்ணம் மற்று இல்- வேறு நினைப்பதற்கு எதுவுமில்லை; என்று உற்றன உற்றன - என்று அவரவர் கருத்தில் தோன்றியவாறு; உரைப்பதாயினர்- பேசலாயினார்கள்: குரங்குகளையும், மனிதர்களையும் கொல்லச் செல்வது நம் ஆற்றலுக்கு ஏற்றதல்ல என்று கூறிய தூம்ராட்சன் கருத்தே நல்லது. என்பார் 'இற்று இதுவே நலம்' என்றனர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- After him, the others too,
- saying, This alone is good; there is no other thought,
- began to say whatever came to each of them,
- their hearts seething like snakes that live in an anthill.
What the poem says
The remaining demon warriors, hissing with anger like cobras in their holes, all chime in with whatever comes into their heads, agreeing that the last speaker was right and nothing else need be considered.