கம்பராமாயணம் 6159 · யுத்த 2.47

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெம்பு இகல் அரக்கரை விலக்கி'வினை தேரா
நம்பியர் இருக்க'என நாயகனை முன்னா
'எம்பி எனகிற்கில் உரை செய்வல் இதம்'என்னாக்
கும்பகருணப் பெயரினான் இவை குறித்தான்.

பொருள் · Meaning in Tamil

கும்பகருணப் பெயரினான் - கும்பகர்ணன் என்ற பெயருடைய இராவணன் தம்பி; வெம்பு இகல் அரக்கரை விலக்கி - இதுவரை பேசிய கோபமும் வலிமையும் உள்ள அரக்கர்களை விலக்கி விட்டு; வினை தேரா நம்பியர் இருக்க என- பின் விளைவை அறியாது பேசுகின்ற இளையவர்களை இருக்க என நிறுத்தி விட்டு; நாயகனை முன்னா - அசுரர் குலத் தலைவனான இராவணனை நெருங்கி; எம்பி எனகிற்கில் - இவன் நம் தம்பி எனவும், நமக்கு நன்மை செய்வான் எனவும் கருதுவாயாயின்; இதம் உரை செய்வல் - உனக்கு நன்மையானவைகளைச் சொல்லுவேன்; என்னா இவை குறித்தான் - என்று பின்வருமாறு கூறலானான்.

வெம்புதல்-கொதித்தல். இகல்-வலிமை. தேரா- தெளியாத. இதம்-நன்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Holding back the demons hot with hostility, saying, Let the young ones
  2. who cannot judge what should be done be still, he turned to the lord
  3. and said, If you count me your brother, I will speak what is good for you,
  4. and he who bore the name Kumpakaruṇaṉ set forth these things.

What the poem says

At this point Kumpakaruṇaṉ, Irāvaṇaṉ's younger brother, silences the hotheads, calling them young men who cannot foresee consequences. Addressing Irāvaṇaṉ, he asks to be heard as a brother who wishes him well.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vempu ikal arakkarai vilakka 'viṉai tērā
nampiyar irukka' eṉa nāyakaṉai muṉṉā
'empi eṉakiṟkil uraiceyval itam' eṉṉā
kumpakaruṇap peyariṉāṉ ivai kuṟittāṉ.