கம்பராமாயணம் 6160 · யுத்த 2.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீ அயன் முதற் குலம் இதற்கு - அண்ணா, நீ பிரமதேவன் முதல்வனாக உள்ள இந்தக் குலத்தில்; ஒருவன் நின்றாய் - ஒப்பற்றவனாய் நிலைத்திருக்கிறாய்; ஆயிரம் மறைப்பொருள் - ஆயிரமாயிரமான வேதங்களின் பொருளை எல்லாம்; உணர்ந்து அறிவு அமைந்தாய் - தெரிந்து நல்லறிவுடையவனாய் இருக்கிறாய்; தீவினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் - இருந்தும் தீய செயல்களை விரும்பித் தெரிந்தே செய்தாய்; ஏயின உறத்தகைய - விதியால் ஏவப்பட்டனவாய் நம்பால் அடையக் கூடியவை, இத்துணை வேயோ- இவ்வளவுடையன மட்டுமோ?
அயன்முதற் குலம்-பிரமனை முதல்வனாக உடைய புலத்திய குலம். ஒருவன் நின்றாய்-ஒப்பற்ற ஒருவனாய் நிலைத்து நின்றாய். ஆயிரம் மறை-வேதங்கள் அளவில்லாதனவாதலின் இவ்வாறு கூறினான். தீவினை என்றது பிறனில் விழைந்தகை. "ஏ” ஐயோ என்ற இரக்கத்தை உணர்த்தும் குறிப்பு மொழி. "ஏ பாவம்” என்ற அருளிச் செயல் (திருவாய் மொழி 2-2-2) ஒப்பிடத்தக்கது. நாம் அடைய இருக்கும் துன்பம் இவ்வளவில் அடங்காது, இன்னும் எத்தனையோ உண்டு என்பதை 'இத்துணையவேயோ' என்பதுணர்த்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You stand alone and unrivalled in this race that has Ayaṉ as its first;
- you have learned the meaning of the thousand Vedas and are full of wisdom;
- yet you have chosen to love an evil deed, knowing it well;
- alas! are the things fated to befall us only so many?
What the poem says
Kumpakaruṇaṉ reminds Irāvaṇaṉ that he is the greatest of a race descended from Piramaṉ and has mastered the Vedas, yet he knowingly committed the evil of desiring another man's wife. The present troubles, he warns, are only the beginning of what fate holds for them.