கம்பராமாயணம் 6161 · யுத்த 2.49

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோ இயல் அழிந்தது என - நமது ஆட்சியின் தன்மை அழிந்து விட்டது என்று; ஓவியம் அமைந்த நகர் - சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை மாநகரத்தை; தீ உண உளைந்தாய் - அனுமன் வைத்த) தீ உண்டமைக்கு மனம் வருந்தினாய்; வேறு ஒரு குலத்தோன் - அரக்கரினம் அல்லாத வேறு ஒரு குலத்தவனான இராமனுக்கு உரிய; தேவியை நயந்து - மனைவியான சீதையை விரும்பி; சிறை வைத்த செயல் நன்றோ - (கவர்ந்து வந்து) சிறையில் வைத்த உனது செயல் நல்லதோ? பாவியர் உறும் பழி - பாவம் செய்தவர் அடையும் பழிகளிலே; இதின் பழியும் உண்டோ - இதை விடவும் கொடிய பழி வேறு உள்ளதோ?

உளைதல்-வருந்துதல். 'நகர் தீ உண, கோவியல் அழிந்ததென உளைந்தாய்' எனக் கூட்டிப் பொருள் கொள்ளல் பொருந்தும், 'நன்றோ' என்பதன் ஓகாரம். நன்றன்று என்று எதிர்மறைப் பொருள் உணர்த்தும். 'உண்டோ' என்பதன் ஓகாரமும் எதிர்மறைப் பொருள். கற்றனன்; ஆயினும் அதற்குத் தக நின்றிலன் என்பது கம்பன் குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You grieved that the city full of paintings was eaten by fire;
  2. thinking your kingship was ruined; but to desire the queen
  3. of a man of another race and keep her in prison, is that a good deed?
  4. Is there any disgrace that sinners earn worse than this?

What the poem says

Kumpakaruṇaṉ turns Irāvaṇaṉ's complaint back on him. Irāvaṇaṉ mourns his burnt city as a blow to his rule, but abducting and imprisoning another man's wife is the worst disgrace any sinner can incur. The commentary observes that Kampaṉ shows Irāvaṇaṉ as learned but not living up to his learning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōviyam amainta nakar tī uṇa uḷaintāy;
kō iyal aḻintatu eṉa vēṟu oru kulattōṉ
tēviyai nayantu ciṟai vaitta ceyal naṉṟō?
pāviyar uṟum paḻi itiṉ paḻiyum uṇṭō.