கம்பராமாயணம் 6162 · யுத்த 2.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நல் நகர் அழிந்தது என நாணினை - அழகிய நகரமாகிய இலங்கை அழிந்து போய் விட்டதே என்று நாணமுற்றாய்; நயத்தால் உன் உயிர் எனத்தகைய தேவியர் - உன் மீதுள்ள விருப்பத்தால் உன் உயிர் என்னும் தன்மையுடைய உனது மனைவிமார்கள்; உன் மேல் இன் நகை தரத் தர- உன்னை நோக்கி இனிய புன்முறுவலைச் செய்து நிற்க (அதைக் கருதாது நீ); ஒருத்தன் மனை உற்றாள் - வேறு ஒருவனுக்கு மனைவியாக அமைந்த சீதையை; பொன் அடி தொழத் தொழ - (உன் விருப்பத்துக்கு இசையச் செய்ய) அழகிய பாதங்களில் வீழ்ந்து பல முறை வணங்கவும்; மறுத்தல் - (அவள் இசையாது) மறுத்துரைத்தல்; புகழ் போலாம் - உனக்குப் புகழ்தரும் செயல் போலும்.
'தரத்தர, தொழத்தொழ' என்பன பலமுறை சிரிக்க, தொழ என்ற பொருளில் அடுக்கி வந்தனவாம், பிறர் செயலால் விளைந்த அழிவிற்கு நாணும் இராவணன் தன் செயலால் விளைந்துள்ள பழிக்கு நாணவில்லையே என்பது கும்பகருணனின் வருத்தம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You are ashamed that the good city was destroyed; while your queens,
- who through love are like your very life, smile sweetly on you again and again,
- you bow again and again at the golden feet of her who belongs to another man's house,
- and her refusal, it seems, is your glory!
What the poem says
Kumpakaruṇaṉ scolds Irāvaṇaṉ for being ashamed of the city's burning but not of his own conduct: ignoring his devoted queens, he has repeatedly fallen at the feet of another man's wife, only to be rejected. Does he think that brings him honour?