கம்பராமாயணம் 6167 · யுத்த 2.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வென்றிடுவர் மானுடவரேனும் - அந்த மானிடர்கள் வெற்றி பெறுவரென்றாலும்; அவர்தம் மேல் நின்று - அவர்கள் மேல் படை கொண்டு சென்று; இடைவிடாது நெறி சென்று - இடையில் விலகாமல் அவர்கள் வரும் வழியே சென்று; உற நெருக்கி - அவர்களை மிகவும் துன்புறுத்தி; தின்றிடுதல் செய்கிலம் எனின் - கொன்று தின்று விடுவதை நாம் செய்யவில்லை என்றால்; செறுநரோடும் - அந்தப் பகைவராகிய மனிதருடனே; தேவர் ஒன்றிடுவர் - தேவர்களும் சேர்ந்து விடுவார்கள்; உலகு ஏழும் - ஏழுலகத்தில் உள்ளவர்களும்; உடன் ஒன்று ஆம் - அவர்களோடு சேர்ந்து விடுவார்கள்.
மானுடவர்-மானிடர்; இங்கு ராம இலக்குவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if the men are to win, unless we take our stand against them,
- go without pause along their way, press them hard
- and eat them, the gods will join with our foes,
- and all seven worlds will be one with them.
What the poem says
Even if the men are destined to win, Kumpakaruṇaṉ argues, the demons must attack relentlessly and destroy them. Otherwise the gods and all seven worlds will join the enemy's side.