கம்பராமாயணம் 6168 · யுத்த 2.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊறுபடை - அந்தப் பகைவர்களின் மிகுந்த படை; ஊறுவதன் முன்னம் - இங்குப் பெருகி வருவதற்கு முன்பே; ஒரு நாளே ஏறு கடல் ஏறி - ஒரே நாளில் இப்பெரிய கடலைக் கடந்து சென்று; நரர் வானரரை எல்லாம் - அந்த மனிதர்களையும், குரங்குப் படைகள் எல்லாவற்றையும்; வேறு பெயராத வகை - வேறு இடங்களுக்குப் பெயர்ந்து செல்ல இயலாதபடி; வேரொடும் அடங்க நூறுவதே கருமம் - வேருடன் முழுவதையும் அழித்தொழிப்பதே நாம் செய்ய வேண்டிய செயலாகும்; என்பது நுவன்றான் - எனக் கூறினான்.
ஊறுபடை-பெருகி வரும் படை (நமக்கு இடையூறு செய்யும் படை என்பது பொருளாம்). நூறுதல் -அழித்தல். வேறு பெயராத வகை-எங்கும் தப்பித்துச் சென்று விடாதபடி. அடங்க -முழுவதும். ஏறுகடல்-பெரிய கடல். ஏறி-கடந்து சென்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before their swelling army surges here, in a single day,
- we must cross the rising sea and the men and monkeys, all of them,
- so that none can escape anywhere, root and all,
- destroy; that is the task, he declared.
What the poem says
Kumpakaruṇaṉ ends with a plan: before the enemy's army grows any larger, the demons should cross the sea in one day and annihilate men and monkeys alike, leaving none to escape.