கம்பராமாயணம் 6169 · யுத்த 2.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குமர ! நன்று உரை செய்தாய் - (இராவணன் கும்பகர்ணனைப் பார்த்து) தம்பி ! நல்லதே சொன்னாய்; நான் அது நினைந்தேன் - நானும் அதைத்தான் நினைத்தேன்; ஒன்றும் இனி ஆய்தல் பழுது - இனி ஒன்றும் ஆராய்வது தீமையாகும்; ஒன்னலரைஎல்லாம் - நமது பகைவர்கள் எல்லோரையும்; கொன்று பெயர்வோம் - அடியோடு அழித்து மீள்வோம்; நமது கொடிப் படையை எல்லாம் - நம் அரக்கர்களின் கொடிகளைத் தாங்கிய படையை எல்லாம்; இன்று எழுக என்க - இன்றே போருக்கு எழுக என ஆணை இடுவாயாக, என இராவணன் இசைத்தான் - என்று இராவணன் கூறினான்.
நமர்- நம்மவர் எழுக என்க-போருக்கு எழுக எனக் கட்டளை இடுக என்பது பொருள் சிட்டர் செயல் செய்கிலை-குலச் சிறுமை செய்தாய் என்பன போன்ற கும்பகர்ணன் கூறிய உரைகளை விட்டுவிட்டு, "போருக்குப் புறப்படலாம்” நூறுவதுவேகருமம் என்பதனை மட்டும் கருத்தில் கொண்டு 'நன்றுரை செய்தாய்' என்ற இராவணனது பண்பைப் புலப்படுத்திய முறை நினைந்து போற்றத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You have spoken well, brother! I thought the same;
- any further deliberation is a mistake; we will kill all our foes
- and come back; let our bannered army, all of it,
- be told, Rise today; so Irāvaṇaṉ declared.
What the poem says
Irāvaṇaṉ seizes on the last part of his brother's speech and ignores the rebukes, praising him for good advice and ordering the army to march at once. The commentary admires how Kampaṉ reveals Irāvaṇaṉ's character by having him hear only what he wants to hear.