கம்பராமாயணம் 6173 · யுத்த 2.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சினத்தோய் - பகைவர் பால் கோபம் மிக்கவனே! குரங்கு பட - குரங்குப் படை அடியோடு இறந்து பட; மேதினி, குறைத்தலை நட போர் அரங்குபட - தலையற்ற உடல் எங்கும் நடனம் ஆடுவதால் உலகம் முழுவதும் போர்க்களம் அரங்கு போல் காணப்பட; மானிடர் அலந்தலை பட - அந்த மானிடர்கள் மனம் கலங்க நிற்க; பேர் இரங்கு படர் சீதைபட - சீதை பார்த்தவர்கள் இரங்கும் படி துன்பப்பட; இன்று இருவர் நின்றார் - நம் பகைவர்களாக நின்ற இருவரது, சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி - தலைகளையும் மலை என நான் கொண்டு வருவதைக் காண்பாய்.
குறைத்தலை - தலையற்ற உடல். போர் அரங்கு - போர்க்களம். அலந்தலை-கலக்கம் (மயக்கமுமாம்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the monkeys slain, with headless trunks dancing over the earth so it becomes a stage of war,
- with the men thrown into turmoil,
- with Cītai suffering a grief that wrings pity, today you shall see me bring the heads
- of the two who stand against us, like mountain peaks, O wrathful one!
What the poem says
Intiracittu boasts that he will wipe out the monkeys, turn the world into a battle stage where headless bodies dance, throw the two princes into confusion and make Cītai grieve, and bring back the heads of Irāmaṉ and Ilakkuvaṉ, huge as mountain peaks.