கம்பராமாயணம் 6174 · யுத்த 2.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுருங்கிய குரங்கு - உடல் சுருங்கி வற்றிய குரங்குகள்; என் - என்னுடைய; கல் இடை கிழிக்கும் - கற்பாறைகளையும் பிளக்கும்படியான; உருமின் கடுமை காணும் - இடி போன்ற கொடியதான; வில் இடை கிழித்த - வில்லிலிருந்து கிளம்பிச் செல்லும்; மிடல் வாளி வெருவி - வலிமை மிக்க அம்புக்குப் பயந்து; தம் பல்லிடை கிழித்து - பல்லை இளித்துக் கொண்டு; இரிவ கண்டு - மூலைக்கொன்றாக ஓடுவதைப் பார்த்து; பயன் உய்ப்பாய் - வெற்றியின் பயனை அனுபவிப்பாய்; சொல்லிடை கழிக்கிலை - இடையிலே வீணே பேசிக் காலத்தைக் கழிக்க வேண்டா.
கல் - மலை (பாறையுமாம்) "காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்” என்ற குறளில் (குறள் 440) உய்த்தல்-நுகர்தல் என்ற பொருளில் வந்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Do not waste time in talk; the shrivelled monkeys,
- fearing the mighty arrows split from my bow,
- fierce as the thunder that splits rock,
- will flee, baring their teeth; you will see it and enjoy the fruit.
What the poem says
Intiracittu urges his father to stop talking. The scrawny monkeys will run grinning in terror from his thunderbolt arrows, and Irāvaṇaṉ will have only to watch and enjoy the victory.